Thirukkural No: 982/1330



குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று

Kunanalam Saandror Nalane Piranalam
Ennalaththu Ulladhooum Andru

குறள் எண்: 982
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : சான்றாண்மை
குறளின் இயல்: குடியியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

சாலமன் பாப்பையா விளக்கம்:

சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

கலைஞர் விளக்கம்:

நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல

மணக்குடவர் விளக்கம்:

சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்: குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று. இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று. (அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன.).
English Translation:
Good in the great is character Than that there is nothing better
English Explanation:
The only delight of the perfect is that of their goodness, all other (sensual) delights are not to be included among any (true) delights
English Couplet:
The good of inward excellence they claim,The perfect men, all other good is only good in name
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)

Search Incoming Terms:

குறள் 982, குணநலம் சான்றோர் நலனே பிறநலம் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், குடியியல் திருக்குறள், சான்றாண்மை திருக்குறள், குணநலம் சான்றோர் நலனே பிறநலம் திருக்குறளின் விளக்கம், kunanalam saandror nalane piranalam thirukkural explanation, porutpaal thirukkural, kudiyiyal thirukkural, saandraanmai thirukkural, kunanalam saandror nalane piranalam thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...