Thirukkural No: 29/1330



குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu

குறள் எண்: 29
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார் பெருமை
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்

கலைஞர் விளக்கம்:

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது

மணக்குடவர் விளக்கம்:

குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

உயர்ந்த குணமென்னும் குன்றின்மேல் நின்ற முனிவர்களுடைய கோபம், இருப்பது கணநேரமேயானாலும் கோபிக்கப்பட்டவர்களால் அக்கோபம் தடுப்பதற்கு முடியாததாகும்.

பரிமேலழகர் விளக்கம்:

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி, கணம் ஏயும் காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், காத்தல் அரிது என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.).
English Translation:
Their wrath, whove climbd the mount of good, Though transient, cannot be withstood
English Explanation:
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted
English Couplet:
The wrath tis hard een for an instant to endure,Of those who virtues hill have scaled, and stand secure
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Greatness of Ascetics (Neeththaar Perumai)

Search Incoming Terms:

குறள் 29, குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், நீத்தார் பெருமை திருக்குறள், குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி திருக்குறளின் விளக்கம், kunamennum kundreri nindraar vekuli thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, neeththaar perumai thirukkural, kunamennum kundreri nindraar vekuli thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...