Thirukkural No: 2/1330



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin

குறள் எண்: 2
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா விளக்கம்:

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

கலைஞர் விளக்கம்:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

மணக்குடவர் விளக்கம்:

மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

வீ. முனிசாமி விளக்கம்:

எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.

பரிமேலழகர் விளக்கம்:

கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?, வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. கொல் என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் நற்றாள் என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
English Translation:
That lore is vain which does not fall At His good feet who knoweth all
English Explanation:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?
English Couplet:
No fruit have men of all their studied lore,Save they the Purely Wise Ones feet adore
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Praise of God (Katavul Vaazhththu)

Search Incoming Terms:

குறள் 2, கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், கடவுள் வாழ்த்து திருக்குறள், கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் திருக்குறளின் விளக்கம், katradhanaal aaya payanenkol vaalarivan thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, katavul vaazhththu thirukkural, katradhanaal aaya payanenkol vaalarivan thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...