Thirukkural No: 981/1330



கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

Katanenpa Nallavai Ellaam Katanarindhu
Saandraanmai Merkol Pavarkku

குறள் எண்: 981
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : சான்றாண்மை
குறளின் இயல்: குடியியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

கலைஞர் விளக்கம்:

ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்

மணக்குடவர் விளக்கம்:

நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று சொல்லுவர் நூலோர்.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.).
English Translation:
All goodness is duty to them Who are dutiful and sublime
English Explanation:
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good
English Couplet:
All goodly things are duties to the men, they sayWho set themselves to walk in virtues perfect way
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)

Search Incoming Terms:

குறள் 981, கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், குடியியல் திருக்குறள், சான்றாண்மை திருக்குறள், கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து திருக்குறளின் விளக்கம், katanenpa nallavai ellaam katanarindhu thirukkural explanation, porutpaal thirukkural, kudiyiyal thirukkural, saandraanmai thirukkural, katanenpa nallavai ellaam katanarindhu thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...