
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
Kaatchik Keliyan Katunjollan Allanel
Meekkoorum Mannan Nilam
குறள் எண்: | 386 | |
---|---|---|
குறளின் பால்: | பொருட்பால் | |
அதிகாரம் : | இறைமாட்சி | |
குறளின் இயல்: | அரசியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.சாலமன் பாப்பையா விளக்கம்:
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)கலைஞர் விளக்கம்:
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்மணக்குடவர் விளக்கம்:
காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர். இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.வீ. முனிசாமி விளக்கம்:
யாவர்க்கும் காணுவதற்கு எளியவனாகவும், யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனாகவும் இருப்பானேயானால் அம்மன்னனது நிலத்தினை எல்லா நிலங்களிலும் உயர்ந்ததாக உலகம் கூறும்.பரிமேலழகர் விளக்கம்:
காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் . (முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.).
English Translation:
That land prospers where the king is Easy to see, not harsh of words
That land prospers where the king is Easy to see, not harsh of words
English Explanation:
The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language
The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language
English Couplet:
Where king is easy of access, where no harsh word repels,That lands high praises every subject swells
Where king is easy of access, where no harsh word repels,That lands high praises every subject swells
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: The Greatness of a King (Iraimaatchi)
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: The Greatness of a King (Iraimaatchi)