Thirukkural No: 507/1330



காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal
Pedhaimai Ellaan Tharum

குறள் எண்: 507
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

கலைஞர் விளக்கம்:

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்

மணக்குடவர் விளக்கம்:

அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல் எல்லா அறியாமையும் தரும். அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல், பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும் (தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.).
English Translation:
On favour leaning fools you choose, Folly in all its forms ensues
English Explanation:
Yields all his being up to follys blind control
English Couplet:
By fond affection led who trusts in men of unwise soul,Yields all his being up to follys blind control
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Selection and Confidence (Therindhudhelidhal)

Search Incoming Terms:

குறள் 507, காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், தெரிந்து தெளிதல் திருக்குறள், காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் திருக்குறளின் விளக்கம், kaadhanmai kandhaa arivariyaarth therudhal thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, therindhudhelidhal thirukkural, kaadhanmai kandhaa arivariyaarth therudhal thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...