Thirukkural No: 623/1330



இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

Itumpaikku Itumpai Patuppar Itumpaikku
Itumpai Pataaa Thavar

குறள் எண்: 623
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : இடுக்கண் அழியாமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

கலைஞர் விளக்கம்:

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

மணக்குடவர் விளக்கம்:

துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர். இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

இடும்பைக்கு இடும்பை படாஅதவர் - வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர் - அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர். (வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.).
English Translation:
Grief they face and put to grief Who grieve not grief by minds relief
English Explanation:
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow
English Couplet:
Who griefs confront with meek, ungrieving heart,From them griefs, put to grief, depart
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Hopefulness in Trouble (Itukkan Azhiyaamai)

Search Incoming Terms:

குறள் 623, இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், இடுக்கண் அழியாமை திருக்குறள், இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு திருக்குறளின் விளக்கம், itumpaikku itumpai patuppar itumpaikku thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, itukkan azhiyaamai thirukkural, itumpaikku itumpai patuppar itumpaikku thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...