Thirukkural No: 23/1330



இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

Irumai Vakaidherindhu Eentuaram Poontaar
Perumai Pirangitru Ulaku

குறள் எண்: 23
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார் பெருமை
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

சாலமன் பாப்பையா விளக்கம்:

இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது

கலைஞர் விளக்கம்:

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்

மணக்குடவர் விளக்கம்:

பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பிறப்பு, வீடு என்னும் இரண்டின் வகைகளை அறிந்து துறவறத்தினை மேற்கொண்ட முனிவர்களின் பெருமையே உலகத்தில் சிறந்ததாகும்.

பரிமேலழகர் விளக்கம்:

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து, ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே, உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, இருமை என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).
English Translation:
No lustre can with theirs compare Who know the right and virtue wear
English Explanation:
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)
English Couplet:
Their greatness earth transcends, who, way of both worlds weighed,In this world take their stand, in virtues robe arrayed
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Greatness of Ascetics (Neeththaar Perumai)

Search Incoming Terms:

குறள் 23, இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், நீத்தார் பெருமை திருக்குறள், இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் திருக்குறளின் விளக்கம், irumai vakaidherindhu eentuaram poontaar thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, neeththaar perumai thirukkural, irumai vakaidherindhu eentuaram poontaar thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...