Thirukkural No: 5/1330



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu

குறள் எண்: 5
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறளின் இயல்: பாயிரவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

சாலமன் பாப்பையா விளக்கம்:

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

கலைஞர் விளக்கம்:

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

மணக்குடவர் விளக்கம்:

மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா, தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

வீ. முனிசாமி விளக்கம்:

அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

பரிமேலழகர் விளக்கம்:

இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை இருள் என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் இருவினையும் சேரா என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).
English Translation:
Gods praise who tell, are free from right And wrong, the twins of dreaming night
English Explanation:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God
English Couplet:
The men, who on the Kings true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Praise of God (Katavul Vaazhththu)

Search Incoming Terms:

குறள் 5, இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், பாயிரவியல் திருக்குறள், கடவுள் வாழ்த்து திருக்குறள், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் திருக்குறளின் விளக்கம், irulser iruvinaiyum seraa iraivan thirukkural explanation, araththuppaal thirukkural, paayiraviyal thirukkural, katavul vaazhththu thirukkural, irulser iruvinaiyum seraa iraivan thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...