Thirukkural No: 629/1330



இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul
Thunpam Urudhal Ilan

குறள் எண்: 629
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : இடுக்கண் அழியாமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:

தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

கலைஞர் விளக்கம்:

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு

மணக்குடவர் விளக்கம்:

இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.).
English Translation:
In joy to joy who is not bound In grief he grieves not dual round!
English Explanation:
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure
English Couplet:
Mid joys he yields not heart to joys controlMid sorrows, sorrow cannot touch his soul
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Hopefulness in Trouble (Itukkan Azhiyaamai)

Search Incoming Terms:

குறள் 629, இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், இடுக்கண் அழியாமை திருக்குறள், இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் திருக்குறளின் விளக்கம், inpaththul inpam vizhaiyaadhaan thunpaththul thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, itukkan azhiyaamai thirukkural, inpaththul inpam vizhaiyaadhaan thunpaththul thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...