Thirukkural No: 628/1330



இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan
Thunpam Urudhal Ilan

குறள் எண்: 628
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : இடுக்கண் அழியாமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:

உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

கலைஞர் விளக்கம்:

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை

மணக்குடவர் விளக்கம்:

இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.).
English Translation:
Who seek not joy, deem grief norm By sorrows do not come to harm
English Explanation:
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man)
English Couplet:
He seeks not joy, to sorrow man is born, he knows,Such man will walk unharmed by touch of human woes
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Hopefulness in Trouble (Itukkan Azhiyaamai)

Search Incoming Terms:

குறள் 628, இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், இடுக்கண் அழியாமை திருக்குறள், இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் திருக்குறளின் விளக்கம், inpam vizhaiyaan itumpai iyalpenpaan thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, itukkan azhiyaamai thirukkural, inpam vizhaiyaan itumpai iyalpenpaan thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...