
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal
Enna Payaththadho Saalpu
குறள் எண்: | 987 | |
---|---|---|
குறளின் பால்: | பொருட்பால் | |
அதிகாரம் : | சான்றாண்மை | |
குறளின் இயல்: | குடியியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.சாலமன் பாப்பையா விளக்கம்:
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?கலைஞர் விளக்கம்:
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?மணக்குடவர் விளக்கம்:
தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.வீ. முனிசாமி விளக்கம்:
பரிமேலழகர் விளக்கம்:
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).
English Translation:
Of perfection what is the gain If it returns not joy for pain?
Of perfection what is the gain If it returns not joy for pain?
English Explanation:
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?
English Couplet:
What fruit doth your perfection yield you, say!Unless to men who work you ill good repay
What fruit doth your perfection yield you, say!Unless to men who work you ill good repay
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)