Thirukkural No: 630/1330



இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு

Innaamai Inpam Enakkolin Aakundhan
Onnaar Vizhaiyunj Chirappu

குறள் எண்: 630
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : இடுக்கண் அழியாமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

கலைஞர் விளக்கம்:

துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்

மணக்குடவர் விளக்கம்:

இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின் அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம். மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம். (துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.).
English Translation:
His glory is esteemed by foes Who sees weal in wanton woes!
English Explanation:
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure
English Couplet:
Who pain as pleasure takes, he shall acquireThe bliss to which his foes in vain aspire
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Hopefulness in Trouble (Itukkan Azhiyaamai)

Search Incoming Terms:

குறள் 630, இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், இடுக்கண் அழியாமை திருக்குறள், இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் திருக்குறளின் விளக்கம், innaamai inpam enakkolin aakundhan thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, itukkan azhiyaamai thirukkural, innaamai inpam enakkolin aakundhan thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...