
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்
Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin
குறள் எண்: | 988 | |
---|---|---|
குறளின் பால்: | பொருட்பால் | |
அதிகாரம் : | சான்றாண்மை | |
குறளின் இயல்: | குடியியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.சாலமன் பாப்பையா விளக்கம்:
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.கலைஞர் விளக்கம்:
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்லமணக்குடவர் விளக்கம்:
ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.வீ. முனிசாமி விளக்கம்:
பரிமேலழகர் விளக்கம்:
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.).
English Translation:
No shame there is in poverty To one strong in good quality
No shame there is in poverty To one strong in good quality
English Explanation:
Poverty is no disgrace to one who abounds in good qualities
Poverty is no disgrace to one who abounds in good qualities
English Couplet:
To soul with perfect virtues strength endued,Brings no disgrace the lack of every earthly good
To soul with perfect virtues strength endued,Brings no disgrace the lack of every earthly good
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)