Thirukkural No: 627/1330



இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

Ilakkam Utampitumpaik Kendru Kalakkaththaik
Kaiyaaraak Kollaadhaam Mel

குறள் எண்: 627
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : இடுக்கண் அழியாமை
குறளின் இயல்: அரசியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

கலைஞர் விளக்கம்:

துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்

மணக்குடவர் விளக்கம்:

உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர். இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று - நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் - தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார். (ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர். காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல், இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம்.).
English Translation:
The wise worry no more of woes Knowing bodys butt of sorrows
English Explanation:
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble
English Couplet:
Mans frame is sorrows target, the noble mind reflects,Nor meets with troubled mind the sorrows it expects
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Hopefulness in Trouble (Itukkan Azhiyaamai)

Search Incoming Terms:

குறள் 627, இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், அரசியல் திருக்குறள், இடுக்கண் அழியாமை திருக்குறள், இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் திருக்குறளின் விளக்கம், ilakkam utampitumpaik kendru kalakkaththaik thirukkural explanation, porutpaal thirukkural, arasiyal thirukkural, itukkan azhiyaamai thirukkural, ilakkam utampitumpaik kendru kalakkaththaik thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...