Thirukkural No: 859/1330



இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு

Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku

குறள் எண்: 859
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : இகல்
குறளின் இயல்: நட்பியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

கலைஞர் விளக்கம்:

ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்

மணக்குடவர் விளக்கம்:

மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.).
English Translation:
Fortune favours when hate recedes Hatred exceeding ruin breeds
English Explanation:
At the approach of wealth one will not think of hatred (but) to secure ones ruin, one will look to its increase
English Couplet:
Men think not hostile thought in fortunes favouring hour,They cherish enmity when in misfortunes power
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Friendship (Natpiyal),
Adikaram: Hostility (Ikal)

Search Incoming Terms:

குறள் 859, இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், நட்பியல் திருக்குறள், இகல் திருக்குறள், இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை திருக்குறளின் விளக்கம், ikalkaanaan aakkam varungaal adhanai thirukkural explanation, porutpaal thirukkural, natpiyal thirukkural, ikal thirukkural, ikalkaanaan aakkam varungaal adhanai thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...