Thirukkural No: 860/1330



இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam
Nannayam Ennum Serukku

குறள் எண்: 860
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : இகல்
குறளின் இயல்: நட்பியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.

கலைஞர் விளக்கம்:

மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்

மணக்குடவர் விளக்கம்:

மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு - மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.).
English Translation:
All evils come from enmity All goodness flow from amity
English Explanation:
All calamities are caused by hatred, but by the delight (of friendship) is caused the great wealth of good virtues
English Couplet:
From enmity do all afflictive evils flow,But friendliness doth wealth of kindly good bestow
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Friendship (Natpiyal),
Adikaram: Hostility (Ikal)

Search Incoming Terms:

குறள் 860, இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், நட்பியல் திருக்குறள், இகல் திருக்குறள், இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் திருக்குறளின் விளக்கம், ikalaanaam innaadha ellaam nakalaanaam thirukkural explanation, porutpaal thirukkural, natpiyal thirukkural, ikal thirukkural, ikalaanaam innaadha ellaam nakalaanaam thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...