Thirukkural No: 983/1330



அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்

Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu
Aindhusaal Oondriya Thoon

குறள் எண்: 983
குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : சான்றாண்மை
குறளின் இயல்: குடியியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

கலைஞர் விளக்கம்:

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்

மணக்குடவர் விளக்கம்:

அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண். இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பரிமேலழகர் விளக்கம்:

அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. (எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.).
English Translation:
Love, truth, regard, modesty, grace These five are virtues resting place
English Explanation:
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness, these are the five pillars on which perfect goodness rests
English Couplet:
Love, modesty, beneficence, benignant grace,With truth, are pillars five of perfect virtues resting-place
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)

Search Incoming Terms:

குறள் 983, அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு குறள் பொருள், பொருட்பால் திருக்குறள், குடியியல் திருக்குறள், சான்றாண்மை திருக்குறள், அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு திருக்குறளின் விளக்கம், anpunaan oppuravu kannottam vaaimaiyotu thirukkural explanation, porutpaal thirukkural, kudiyiyal thirukkural, saandraanmai thirukkural, anpunaan oppuravu kannottam vaaimaiyotu thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...