
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku
குறள் எண்: | 1 | |
---|---|---|
குறளின் பால்: | அறத்துப்பால் | |
அதிகாரம் : | கடவுள் வாழ்த்து | |
குறளின் இயல்: | பாயிரவியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறதுசாலமன் பாப்பையா விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன, (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறதுகலைஞர் விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மைமணக்குடவர் விளக்கம்:
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.வீ. முனிசாமி விளக்கம்:
உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான அகர மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.பரிமேலழகர் விளக்கம்:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக, என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க. விளக்கம்எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன, உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, எழுத்து எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. உலகு என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ஆதிபகவன் முதற்றே என உலகின் மேல் வைத்துக் கூறினார், கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
English Translation:
A leads letters, the Ancient Lord Leads and lords the entire world
A leads letters, the Ancient Lord Leads and lords the entire world
English Explanation:
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
English Couplet:
A, as its first of letters, every speech maintains,The "Primal Deity" is first through all the worlds domains
A, as its first of letters, every speech maintains,The "Primal Deity" is first through all the worlds domains
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Praise of God (Katavul Vaazhththu)
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Praise of God (Katavul Vaazhththu)