
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
Aatruvaar Aatral Panidhal Adhusaandror
Maatraarai Maatrum Patai
குறள் எண்: | 985 | |
---|---|---|
குறளின் பால்: | பொருட்பால் | |
அதிகாரம் : | சான்றாண்மை | |
குறளின் இயல்: | குடியியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.சாலமன் பாப்பையா விளக்கம்:
ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.கலைஞர் விளக்கம்:
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்மணக்குடவர் விளக்கம்:
பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்: சான்றோர்தம் பகைவரை ஒழிக்கும் கருவியும் அதுவே.வீ. முனிசாமி விளக்கம்:
பரிமேலழகர் விளக்கம்:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே. (ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன்கூறினார்.).
English Translation:
Humility is valours strength A force that averts foes at length
Humility is valours strength A force that averts foes at length
English Explanation:
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking), and that is the weapon with which the great avert their foes
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking), and that is the weapon with which the great avert their foes
English Couplet:
Submission is the might of men of mighty acts, the sageWith that same weapon stills his foemans rage
Submission is the might of men of mighty acts, the sageWith that same weapon stills his foemans rage
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)
Iyal Name: Miscellaneous (Kudiyiyal),
Adikaram: Perfectness (Saandraanmai)