எஸ்றா வசனங்கள்

எஸ்றா 1:1 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:
Posted by: Tamilpedia
எஸ்றா 1:2 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
Posted by: Tamilpedia
எஸ்றா 1:3 அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன், எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.
Posted by: Tamilpedia
எஸ்றா 1:4 அந்த ஜனங்களில மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.
Posted by: Tamilpedia
எஸ்றா 1:5 அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய, ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்,
Posted by: Tamilpedia
எஸ்றா 1:6 அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
Posted by: Tamilpedia
எஸ்றா 1:7 நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
Posted by: Tamilpedia
எஸ்றா 1:8 அவைகளைப் பெர்சியாவின் ராஜξவாகிய கோரǠθ் பொக்கிஷகύகாரனாகிய மிΤ்திரேΤாத்தின் கையοனால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான்.
Posted by: Tamilpedia
எஸ்றா 1:9 அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
Posted by: Tamilpedia
எஸ்றா 1:10 பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம்.
Posted by: Tamilpedia
எஸ்றா 1:11 பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டுபோனான்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
Posted by: Tamilpedia
எஸ்றா 2:2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
Posted by: Tamilpedia
எஸ்றா 2:3 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:4 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:5 ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:7 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:8 சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:9 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:10 பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:11 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:12 அஸ்காதின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று இருபத்திரண்டுபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:13 அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
Posted by: Tamilpedia
எஸ்றா 2:14 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
Posted by: Tamilpedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...